நன்றி ரோஜர் ப்ளாக்!!!!!!!!!!!
ரோஜர் ப்ளாக், இன்று டிவியில் காமன்வெல்த் போட்டி பற்றி இந்தியா சார்பாக பேசிய ஒரே ஆள். இவர் 1986ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டியில் 400 ஓட்டபந்தயத்தில் தங்கம் வென்றவர்.
காமன்வெல்த் போட்டி ஆர்கனைசிங்க் கமிட்டிக்கு போதாத நேரம்....கட்டமைப்பு பணிகள் முடியல, பாதுகாப்பு குறைவு மற்றும் போதிய சுகாதாரம் இல்லாத குடியிருப்புகள், இப்படி பல விஷயத்துக்கு இடையில வந்த இன்னொரு கெட்ட நேரம்தான் போட்டி மைதானத்தின் ஓவர்ப்ரிட்ஜ் இடிந்து விழுந்த செய்தி.
பிபிசி, ஸ்கை நீயூஸ் எந்த சேனல் வச்சாலும் இதே நீயூஸ்தான். ஸ்காட்லாந்து, கனடா, நீயூசி, ஆஸி போன்ற நாடுகள் தங்கள் வீரர்களின் பாதுகாப்பு கருதி போட்டியில் கலந்து கொள்ள முடியாது என்று செய்திகள் வெளியிட்டன. அவங்க பேட்டி கொடுத்தது என்னமோ ஒரு தடவைதான் ஆனால் இந்த டிவி காரங்க இருக்காங்கலே இதே நீயூஸ ஓராயிரம் தடவை போட்டுருப்பாங்க. இவ்வளவு பேட்டி மற்றும் கேள்விக்கு, போட்டி நடத்தும் அதிகாரிகளிடமிருந்து வந்த ஒரே பதில் என்னவோ கட்டுமானப்பணிகள் முடிவடைடந்துவிடும், திட்டமிட்ட படி போட்டி நடக்கும், அசராம இதே பதில சொல்றாங்கப்பா.
இப்படி ஒட்டு மொத்த மீடியாவும் இந்தியாவையும், காமன்வெல்த் போட்டி செயல்பாட்டு குழுவையும் வறுத்தெடுக்க இந்த ரோஜர் ப்ளாக் ஒருவர் தான் போட்டி நடத்துவதற்க்காக ஆதரவாக பேசினார். விளையாடு வீரர்களுக்கு தங்குமிடத்தை விட விளையாட்டு தான் முக்கியமாக இருக்க வேண்டும், எங்கதான் பாதுகாப்பு இருக்கு லண்டன்ல கூட பாதுகாப்பு இல்ல.........அதனால இந்த மாதிரியான காரணங்களை விடுத்து போட்டியில் கலந்து கொள்ள அனைத்து வீரர்களுக்கும் அழைப்பு விடுத்தார்.
ஒரு பக்கம் அவர் பேசியது சரியாகவே பட்டாலும், இன்னொரு பக்கம் நம்மளால வெறும் 56 நாடுகள் பங்கேற்க்கும் ஒரு போட்டி கூட நடத்த முடியலையேன்னு வருத்தமாத்தான் இருக்கு. உலக அரங்கில் இந்தியா அடுத்த கட்டத்துக்கு முன்னேறிக்கிட்டு இருக்குன்னு சொன்னா மட்டும் போதாது, அதற்கு இந்த மாதிரி ஒரு போட்டி நடத்தி நிரூபிச்சுக்கனும். ஏழு வருசமா திட்டமிட்டு எழுபத்தியேழாயிரம் கோடி செலவழித்து ஒரு வேலைய சரியா செய்யலைன்றது கஷ்டமாத்தான் இருக்கு. இது ஒரு தனி நபரோட தப்பு கெடையாது அரசியல்வாதிகள், அதிகாரிகள், காண்ட்டிராக்டர்கள் மற்றும் பல பேரோட தப்பு(ஊழல், கடமையின்மை, பொறுப்பு இல்லாதது) சேர்ந்திருக்கு. மொத்தத்துல ஒரு மோசமான ப்ராஜக்ட்டுக்கு சிறந்த எடுத்துகாட்டு.
இப்படி ஒரு விஷயம் நடந்தது ஒரு வகையில நல்லதுதான், இதுல மட்டும் எவ்ளோ லெசன்ஸ் லேர்ண்ட்.......; நம்ம அரசியல்வாதிகள், கேள்வியே கேட்காத மக்கள் மற்றும் எதிர்கட்சிகள் கேட்கும் ஆக்கப்பூர்வமில்லாத கேள்விகளுக்கு மட்டுமே பதில் சொல்லி பழகிவிட்டார்கள் இப்பதான் உலக நாடுகளின் கேள்வி மற்றும் மீடியாக்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய நிலைமை, சொல்லட்டும் அட்லீஸ்ட் அவங்க வேலை என்னன்னாவது தெரிஞ்சுக்கட்டும். இந்த போட்டியின் விமர்சனங்களை ஒரு பாடமா எடுத்து இனிமேல் இது மாதிரி ஒரு மோசமான திட்டமிடல் இல்லாம பாத்துக்கலாம்.
பார்ப்போம், இந்திய விளையாட்டு வரலாறுல இது ஒரு கறுப்பு புள்ளியாக ஆகாம......எல்லா வேலைகளும் வேகமா முடிந்து போட்டி திட்டமிட்ட படி நடக்க வேண்டிக்கவும்(நம்மளால முடிஞ்சது...).
இந்த பதிவு போடும் முன்பு வந்த கடைசி செய்தி, இங்கிலாந்து அணி திட்டமிட்டபடி முதல் 22 வீரர்களை அனுப்பும்.
nice pa
ReplyDeleteThat's true. No planing for the big event. Advice orgnation team to clear PMP first
ReplyDeleteGood and needed discussion of the hour. This game supposed to be a national pride(hope not to become an national shame).
ReplyDeleteஇந்தியா எப்போதும் சிறந்த எடுத்துகாட்டாக அமையும் .அதற்க்கு இந்த காமன்வெல்த் போட்டி ஓர் சிறந்த உதாரணம் . இனி IIT/IIM will lots of projects on this why there were so many failures....!!!!!!!!!!!!!!!........Sad thing is.....we tax paying citizens unable to question the responsible persons ............Incredible India
ReplyDeletewelcome to blogging.
ReplyDeleteகாமன்வெல்த் போட்டி வெற்றிகரமா 7000 கோடியை முழுங்கி நடந்துவிட்டது
//உலக அரங்கில் இந்தியா அடுத்த கட்டத்துக்கு முன்னேறிக்கிட்டு இருக்குன்னு சொன்னா மட்டும் போதாது, அதற்கு இந்த மாதிரி ஒரு போட்டி நடத்தி நிரூபிச்சுக்கனும்//
இது ஒரு நல்ல நகைச்சுவை.
60 விழுக்கட்டிற்குமேலான மக்கள் வறுமை கோட்டின் கீழ் வாழும்போது எப்படித்தான் இந்தியா அரசியல் (வி)வாதிகளுக்கும், நகர் வாழ் மேல்தட்டு மக்களுக்கும், வெட்கம் இல்லாமல் நாட்டின் வளர்ச்சி அடுத்தநிலைக்கு முன்னேறுகிறது என்று சொல்ல மனம் வருகிறதோ.
இந்த வெட்டி ஜம்பத்திருக்கு பதிலாக, 7000 கோடியை கல்விக்கும், அடிப்படை வசதி மேம்பாட்டுக்கும் செலவிட்டிருந்தால் பயன் இருந்து இருக்கும் அல்லது குறைந்த பட்சம் இந்த தொகையை விளையாட்டு வளர்ச்சிகாக செலவிட்டிருந்தால் குறைந்தது 5 -6 தங்க பதக்கதையவது அடுத்த ஒலிம்பிக்சில் வென்று இருக்கலாம்.
ஒரே இந்திய அரசியல்வாதி மணிசங்கர அயிர்
(இவரின் மற்ற கொள்கைகளுக்கும், கட்சிக்கும் எனக்கு உடன்பாடில்லை) மட்டுமே இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மனசாட்சயுடையவர்.
//இப்பதான் உலக நாடுகளின் கேள்வி மற்றும் மீடியாக்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய நிலைமை, சொல்லட்டும் அட்லீஸ்ட் அவங்க வேலை என்னன்னாவது தெரிஞ்சுக்கட்டும்//
3000 மேலான மக்களை கொன்ற யூனியன் கார்பைட் தொழிற்ச்சாலையில் நடந்த விபத்துக்கும் எல்லா உலக ஊடகங்களும்தான் கேள்வி எழுப்பின. ஒன்றும் நடக்காது இந்திய அரசியல் வாதிகளிடம் யார் கேட்டாலும்.